Wednesday, March 9, 2016

இந்த உலகம் நிலையில்லை




இந்த உலகம் நிலையில்லை


பல்லவி

இந்த உலகம் நிலையில்லை
வாழும் வாழ்க்கையும் நிலையில்லை
புரியும் நாள் எப்போது?
பயனில்லை அப்போது!

புரியும் நாள் எப்போது?
பயனில்லை அப்போது!


சரணம் 1

வேதனை வாழ்வில் இருந்தாலோ
வல்லவன் அவனிடம் முறைகளிடு
சோதனை தந்திடும் ஷிர்க் வழியில்
சேர்ந்து நீ திரிவதை மறந்துவிடு!

அந்நியர் அவர்களின் மனதறிந்து
அன்புடன் பழகி இனிமை கொடு...
இஸ்லாத்தை அவர்கள் உணர்ந்துவிட
அவர்களுக்கோர் வாய்ப்பு கொடு

(இந்த உலகம்)

சரணம் 2

நன்மை செய்வதிலே பல தயக்கம்
ஆடம்பரங்கள் மீதுதான் மயக்கம்
எல்லாம் அழிந்துபோகும் ஒருநாளில்
அன்று பயனில்லை உன் வாழ்க்கை!

நபியின் வார்த்தைகள் முத்துக்கள்
நாம் தேட வேண்டிய சொத்துக்கள்
மறுமைநாள் அருகில் வரும்போது
மாண்ட நிமிடங்கள் திரும்பாது!

(இந்த உலகம்)

Saturday, May 16, 2015

பூக்கள் யாவையும்

பூக்கள் யாவையும்


பல்லவி

பூக்கள் யாவையும்
என் கண்கள் காணுதே..
உன்னைக் காணாத நெஞ்சு
குழந்தை போல் ஏங்குதே..

இதயத்தின் அறைகளிங்கு
இருட்டாகக் கிடக்குதே..
உன்னைச் சுற்றியே தினம்
மனப்பறவை பறக்குதே..



சரணம் 1

வெளியே தெரியும் பாலைவனம்
உள்ளத்தில் கொதிக்குதே..
வாழ்க்கையின் சுவடுகளை
காலம் என்னில் பதிக்குதே..

நகர்கின்ற நாட்களெல்லாம்
நரகம் போல் எரிக்குதே..
இந்த மனம் என்றும்போல்
உன் நினைப்பால் தவிக்குதே..

நெஞ்சம் வலிக்குதே..

(பூக்கள் யாவையும்)



சரணம் 2

நிலவு இங்கே ஈரமின்றி
அக்கினி போல் மாறுதே..
தென்றலாக வரும் காற்று
புயல் போலச் சீறுதே..

உன்னோடு சேரும் நாளை
உணர்வுகள் தினம் வேண்டுதே..
ரகசியக் கனவுகளை
நாளும் இமைகள் தேடுதே..

மனம் வாடுதே..

(பூக்கள் யாவையும்)

Sunday, November 30, 2014

ஏன் ஏன் அப்படிப் பார்த்தாய்?

ஏன் ஏன் அப்படிப் பார்த்தாய்?

பல்லவி

ஏன் ஏன் அப்படிப் பார்த்தாய்?
ஏன் ஏன் அப்படி சிரித்தாய்?
ஏன் ஏன் அப்படி ரசித்தாய்?

பேரூந்தில் கைப்பிடித்தேன்
பேசாமல் நின்றிருந்தாய்
மெதுவாக நகர்ந்து வந்தேன்
மெல்ல நீ விலகிச் சென்றாய்


சரணம் 1

வாசனை மலர்களிலே – உன்
வார்த்தை தெறிக்குதடி
பாசமாய் பார்க்கையிலே – என்
ஜீவன் மரிக்குதடி

தூரிகை போல் வந்து
என்னை வரைந்தாயடி
கிறங்கிடச் செய்கின்ற
அழகால் அறைந்தாயடி


சரணம் 2

காவலில் வைத்த மனசை
காவிச் சென்றாயடி
கட்டுண்டு மிதந்திருந்தேன்
கள்வன் என்றாயடி

குளிர்ச்சியான நதியைப்போல்
நெஞ்சில் விழுந்தாயடி
கிழக்கிலே சூரியன் போல்
என்னுள் எழுந்தாயடி

ஆயிரம் சொந்தங்கள்

ஆயிரம் சொந்தங்கள்


பல்லவி

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலே இருந்தென்ன
என்னவளே என்னருகே
நீயிருந்தா போதுமடி

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலே இருந்தென்ன
என்னவளே என்னருகே
நீயிருந்தா போதுமடி



சரணம் 1

கண்மணியே உனக்காக
கவிநூறு நான் படைப்பேன்
கண்ணீரை நீ உதிர்த்தால்
கலங்கியே மனம் துடிப்பேன்

உயிர் உடம்பில் உள்ள வரை
உனக்காக நானிருப்பேன்
உனைப் பிரிந்தால் மறுகணமே
உயிர் நீங்கி நான் இறப்பேன்


சரணம் 2

பூ மேல பனித்துளியா
விழி ரெண்டில் பதிஞ்சிருக்க
காற்றாக தினம் மாறி
எனைச் சுற்றி நெறஞ்சிருக்க

குயில் கூவும் இன்னிசையாய்
இதயத்தில் நீயிருக்க
நட்சத்திர அழகெல்லாம்
நடுநெற்றியில் வரஞ்சிருக்க

Tuesday, October 28, 2014

கண்கள் உன்னைத் தேடுதடி

கண்கள் உன்னைத் தேடுதடி

பல்லவி

கண்கள் உன்னைத் தேடுதடி
கண்மணியே கண்மணியே
நெஞ்சம் உன்னை நாடுதடி
என்னுயிரே என்னுயிரே

அனு பல்லவி

தாரகைக் கூட்டம் பார்க்கையிலே
உன் சிரிப்பு கண் எதிரே
தாமரைப் பூ பார்க்கையிலே
உன் கண்கள் நினைவினிலே



சரணம் 1

கனவுகளில் வந்து கீதமிசைத்தாய்.. எனை
வாவென்று அழகிய கண்கள் அசைத்தாய்..
மனசுக்குள் புகுந்து ஊஞ்சல் ஆடினாய்
எனக்கு மட்டும் நீ ஏஞ்சல் ஆகினாய்

உயிர் தேகம் இரண்டிலும் ஆட்சி புரிகிறாய்
நீ எனக்கென பார்வையால் சாட்சி பகர்கிறாய்

உன்னருகில் வாழ்ந்திருந்தாலே
உலகமொரு சுவர்க்கமே....



சரணம் 2

காதலோடு நீ என்னைப் பார்க்கிறாய்..
பார்வையால் எந்தன் கவலை தீர்க்கிறாய்
தென்றலாக மாறியே தீண்டிப் போகிறாய்..
தெரியாதது போல் தாண்டிப் போகிறாய்

இதயத்தில் மகிழ்ச்சி காட்டிச் செல்கிறாய்..
இயல்பான என்னை மாற்றிக் கொல்கிறாய்

உன்னருகில் வாழ்ந்திருந்தாலே
உலகமொரு சுவர்க்கமே....

Wednesday, January 15, 2014

வெயில் நிறத்து தோல் கொண்டு


வெயில் நிறத்து தோல் கொண்டு

பல்லவி


ஆண் - வெயில் நிறத்து தோல் கொண்டு
             குயில் போல கதைப்பவளே
             துயில் கொள்ளப் போகையிலே
              மெயில் கொஞ்சம் பார்ப்பாயா?

பெண் - உன் போனில் ரிங்டோனாய்
              என் குரலைப் போட்டவனே
              கண் துயில போகையிலே
              இன்பாக்ஸை பார்ப்பாயா?


சரணம் 1

ஆண் -    இதயத்தின் நான்கறையில்
                 இன்பமாக உன் நினைவு
பெண் -    இதை நானும் உணர்வேனே
                  இங்கேயும் உன் கனவு

ஆண் -    ஏ.. பெண்ணே...
                நீ என்னை என்ன செய்து
                 உள்ளத்தில் ஒழித்துக்கொண்டாய்

பெண் -    ஏ பையா...
                 இரு விழிக்குள் எனை இருத்தி
                  இமைகளால் அணைத்துக்கொண்டாய்            (வெயில்)


சரணம் 2

ஆண் -    காதலிலே தோல்வியில்லை
                காதலர் தோற்பதில்லை
பெண் -   சாதலிலே பயன்களில்லை
                சாதனை ஏதுமில்லை

ஆண் -    அன்பே நீ...
                எனக்காக பிறந்தவளே
                எனக்காய் மலர்ந்தவளே

பெண் -    கண்ணா நீ...
                 முதல் குழந்தை நீதானே
                 முத்தங்கள் தருவேனே                    (வெயில்)


(பாடலுக்கான சூழ்நிலை – தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்;போது)

Wednesday, January 8, 2014

இஸ்லாமிய மெல்லிசைப் பாடல் - வல்லோனின் ஆணை வரமாய் நினைத்தே...

இஸ்லாமிய மெல்லிசைப் பாடல் - 

வல்லோனின் ஆணை வரமாய் நினைத்தே...

வல்லோனின் ஆணை
வரமாய் நினைத்தே தினமும்
வாழ்ந்திடுவோம்..
நோன்பின் புனிதம்
மனதினில் ஏற்றே
நன்மையின்பால் விரைவோம்! (பல்லவி)

இம்மை வாழ்க்கையும்
மறுமை வாழ்க்கையும்
சிறந்திட ஆசைகொள்வோம்
உண்மையின் பாதையில்
உயிர் துறப்பதற்கு - நாளும்
துணிந்து நிற்போம்! (அனு பல்லவி)

வறியோரின் பசிபோக்க
வழிகாட்டுவோம் - நாம்
ஏழைகள் வாழ்வினிலே
எழில் கூட்டுவோம்..
மனத்தூய்மை கொண்டே - நாம்
மறை ஓதுவோம் - தினம்
இறைபோற்றி அளிவில்லா
அருள் வேண்டுவோம்!

லைலத்துல் கத்ர் என்ற
இரவொன்றினை - ரமழானில்
தந்திட்டாய் யா ர'ஹ்மானே..
சுவனமாம் ரய்யானில்
வீற்றிருப்போமே - ஸவ்ம் என்ற
நோன்புகளை நோற்பதினாலே! (சரணம் - 1)

துஆக்களும் திருநாளில்
கபூல் ஆகுமே - அந்த
ஷைத்தான்கள் பயத்தாலே
வெருண்டோடுமே..
உடல் பிணியும் நீங்கும்
இந்த ரமழானிலே - எம்
உணர்வுகளும் சீராகும்
இது போதுமே!

உலகத்து மாந்தரே
கேட்டிடுவீரே - ஸக்காத்தும்
ஸதக்காவும் வழங்கிடுவீரே..
மக்கத்து மாணிக்கம்
நபிபெருமானின் - நாமத்தில்
ஸலவாத்தும் சொல்லிடுவீரே!!! (சரணம் - 2)